பந்தயத்தின்போது சைக்கிள் ஓட்டிச்சென்றவரைத் தாக்கிய காளையின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
மத்திய கலிபோர்னியாவில் 2013 ஆம் ஆண்டுமுதல் ஆஃப் ரோடு ரேஸ் எனப்படும் சாலைக்கு வெளியேயான சைக்கிள் ஓட்டும் பந்தயம் நடைபெற்றுவருகிறது. அதன் தொடர்ச்சியாக, அண்மையில் மத்திய கலிபோர்னியாவில் சைக்கிள் ஓட்டும் பந்தயம் நடைபெற்றது.
சுமார் 80 மைல் தொலைவுள்ள அந்த இடத்தில் 6 ஆயிரம் அடி உயரமுள்ள மலைப்பகுதிகளும் உண்டு. இந்தப் பந்தயத்தில் பலர் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். அப்போது மலைப்பகுதியிலிருந்து வந்த காளை ஒன்று வீரர்களைப் பந்தாடத் தொடங்கியது. மற்றவர்கள் சுதாரிப்பதற்குள் 4 வீரர்களை அந்தக் காளை தாக்கியது.
காளையின் எதிர்பாராதத் தாக்குதலால் வீரர்கள் நிலைகுலைந்து போயினர். காயமடைந்த வீரர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்றனர்.
தங்கள் எல்லைக்குள் அந்நியர்கள் வந்துவிட்டதால் அந்தக் காளை தாக்கத்தொடங்கி இருக்குமோ? அல்லது காளைக்கும் வீரர்களுக்கும் முன்பகை இருந்திருக்குமோ?
விசாரணைக் கமிஷன் அமைச்சு விசாரிச்சு தெரிஞ்சுக்குவோம்…..