மணமேடையிலேயே தூங்கிய மணப்பெண்

93
Advertisement

https://www.instagram.com/reel/CW3aFSbBtBt/?utm_source=ig_web_copy_link

திருமண மேடையிலேயே தூங்கிக்கொண்டிருக்கும் மணப்பெண்ணின் வீடியோ ஆன்லைனில் வைரலாகியுள்ளது.

ஹிமாச்சலப்பிரதேச மாநிலம், சிம்லா நகரில் அண்மையில் ஒரு திருமணம் நடைபெற்றது. அந்தத் திருமண விழாவில் உறவினர்கள் முன்னிலையில் திருமணச் சடங்குள் சிறப்பாக நடைபெற்றன. மணமக்களும் முதலில் ஆர்வமாகத் திருமணச் சடங்குகளைச் செய்தனர். நேரம் செல்லச்செல்ல திருமணச் சடங்குகளும் நீண்டுகொண்டே சென்றன.

Advertisement

வழக்கமாக சில மணி நேரங்களில் முடிவடைந்துவிடும் திருமணச் சடங்குகள் இந்தத் திருமண நிகழ்வில் நள்ளிரவு தாண்டியும் தொடர்ந்தன. இரவில் தொடங்கிய அந்தத் திருமணச் சடங்குகள் அடுத்த நாள் காலை 6.30 மணிவரை நீடித்தது.

ஆனாலும், மணமகன் அசராமல் நின்றபடி திருமணச் சடங்குகளைச் செய்துகொண்டிருந்தார். மணமகளோ உடல் அசதியால் ஷோபாவில் உட்கார்ந்தபடி சடங்குகளைச் செய்துகொண்டிருந்தார்.

சடங்குகள் இப்போது முடிந்துவிடும் என எதிர்பார்த்துக்கொண்டிருந்த மணமகளோ திருமணச் சடங்குகள் நீண்டுகொண்டே போனதால், சிறிது நேரத்திலேயே ஷோபாவில் உட்கார்ந்தவாறே உறங்கத் தொடங்கிவிட்டார்.

என்றாலும், உறவினர்கள் அதைப் பற்றிப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், சடங்குகளைத் தொடர்ந்தனர்.

எவ்வளவுதான் சோர்வாக இருந்தாலும், திருமணத்தின்போது மணமக்கள் பேராவலுடன் விழித்தே இருப்பர். ஆனால், திருமணத்தன்றே மணமகள் உறங்கிய செயலை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கிண்டலும் கேலியுமாகப் பதிவிட்டு வருகின்றனர்.