கணவன் வேலைக்குச் சென்றதால், மனைவி செய்த விநோதச் செயல் இணையத்தில் வைரலாகியுள்ளது.
உஸ்பெகிஸ்தான் நாட்டின் தலைநகரான தாஷ்கண்ட் நகரில் கணவன் வேலைக்குச் சென்றதால், அவரது மனைவி, தன் 3 வயதுப் பெண் குழந்தையை உயிரியல் பூங்காவுக்குள் உள்ள மிருகக்காட்சி சாலையில் கரடியை நோக்கி வீசிய செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ட்டுவிட்டரில் ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. திடுக்கிடச்செய்யும் அந்த வீடியோவில் இளம்பெண் ஒருவர், தன் கையிலுள்ள குழந்தையை 16 அடி ஆழமுள்ள அகழியில் உலா வரும் கரடிமுன் தூக்கி வீசுகிறார்.
அங்கிருந்தவர்கள் தடுக்கும்முன் குழந்தையை வீசிவிட்டாள். அதிர்ஷ்டவசமாக, உடனடியாக அங்குவந்த பூங்காப் பாதுகாவலர்கள் கரடியைக் கூண்டினுள்ளே இழுத்துச்சென்றுவிட்டனர். அதற்குள் குழந்தையைக் கடித்துவிட்டது கரடி. சிறிது காயங்களுடன் குழந்தையை மீட்ட பாதுகாவலர்கள், மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
தற்போது அந்தப் பெண்மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அந்நாட்டு சட்டப்படி 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்….
அந்தப் பெண் எதற்காக இப்படியொரு கொடூரச் செயலில் ஈடுபட்டார் என்பது வெளிவந்துள்ளது.
பல்கலைக்கழகம் ஒன்றில் விரிவுரையாளராகப் பணிபுரிந்து வருகிறார் அந்தப் பெண். தன் கணவன் வேலைக்குச் சென்றதால் மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டாராம். அதைத் தொடர்ந்தே இப்படியொரு ஈவிரக்கமற்ற செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
தற்போது தன் இரண்டு குழந்தைகள் மற்றும் தந்தையுடன் வசித்து வருகிறார் அந்தப் பெண்.