12 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

261

அரியலூரில் நகர மேம்பாட்டு குழும இணை இயக்குநர் வீட்டில் 12 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஒரு கிலோ தங்கம், 9 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருச்சி மாநகராட்சி நகர மேம்பாட்டுக் குழும இணை இயக்குநராக உள்ள தன்ராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அரியலூரில் உள்ள அவரது வீட்டில் 12 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சோதனையில், ஒரு கிலோ தங்கம், 9 லட்சம் ரூபாய் ரொக்கம், கார், ஹார்ட் டிஸ்குகள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.