போரடித்ததால் குரங்குகள் செய்த செயல்

228
Advertisement

குரங்குகளின் விநோத விளையாட்டு இணையத்தைக் கவர்ந்து வருகிறது.

சிறுவர் சிறுமியர் குரங்கு விளையாட்டை விளையாடி மகிழ்வர். புதிர் விளையாட்டுகளிலும் ஈடுபட்டு உற்சாகம் அடைவர். சிலசமயங்களில் இளைஞர்களும் இத்தகைய விளையாட்டுகளை விளையாடுவதுண்டு.

தற்போது குரங்குகளும் இத்தகைய விளையாட்டில் ஈடுபட்ட வீடியோ ட்டுவிட்டரில் வெளியாகி, மனிதர்களை வியக்க வைத்துள்ளது. அந்த வீடியோவில் 3 குரங்குகள் சேர்ந்து புதிர் விளையாட்டில் ஈடுபட்டுள்ளன.

சிறந்த பொழுதுபோக்காகவும், சிந்தனைத்திறனை அதிகரிப்பதாகவும், மனதை ஒருமுகப்படுத்துவதாகவும் அமையும் இத்தகைய விளையாட்டு, செலவில்லாதது. எப்போதும் எங்கேயும் விளையாடக்கூடிய இந்த விளையாட்டைத் தனியாகவும் விளையாட முடியும் என்பதால், எப்போது விளையாடினாலும், எத்தனை முறை விளையாடினாலும் சலிப்பு ஏற்படாது.

அனைவரையும் கவர்ந்திழுக்கும் இந்தப் புதிர் விளையாட்டு குரங்குகளையும் தற்போது ஈர்த்துள்ளது.

காட்டில் அலைந்து திரிந்து, மரத்துக்கு மரம் தாவிக்குதித்து உண்டதும் விளையாடியதும் குரங்குகளுக்குப் போரடித்துவிட்டதோ?