இனி ஒரு சீன் லீக் ஆகாது! ‘லியோ’ படக்குழு எடுத்த அதிரடி முடிவு

156
Advertisement

டைட்டில் வெளியான நாள் முதலே விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தை பற்றிய எதிர்ப்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன.

ப்ரோமோ வீடியோவிலேயே ரிலீஸ் தேதி வரைக்கும் படக்குழு அறிவித்து விட்ட நிலையில், படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான், மிஷ்கின், மேத்யூ தாமஸ், அர்ஜுன் சர்ஜா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கும் ‘லியோ’விற்கு 1000 கோடி வசூல் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் இருந்து சில காட்சிகள் லீக் ஆகி இணையத்தில் வைரலாக பரவவே, படக்குழு அதிரடியான முடிவெடுத்துள்ளது.

ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வரும் நபர்கள் கேமரா அல்லது செல்போன் வைத்திருக்கிறார்களா என தீவிர சோதனைக்குட்படுத்தபட்ட பின்னரே அனுமதிக்கபட்டு வருகின்றனர்.

மேலும், லீக் ஆன காட்சிகளை சமூகவலைதளங்களில் பகிர்ந்தால் எச்சரிக்கையின்றி நேரடியாக நீக்கப்படும் என படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.