அட்லீ வீட்டுல விசேஷம்! Surprise கொடுத்த விஜய்

309
Advertisement

‘ராஜா ராணி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான அட்லீ, எத்தனை விமர்சனங்களுக்கு ஆளானாலும் கூட எடுக்கும் படமெல்லாம் ஹிட் அடித்து கோலிவுட்டின் வெற்றிமுக இயக்குனராகவே மாறிவிட்டார் என சொல்லலாம்.

அட்லீ இயக்கிய நான்கு தமிழ் படங்களில் மூன்று, விஜய் நடித்த படங்கள் ஆகும். இயக்குனர், நடிகர் என்பதையும் தாண்டி அட்லீ மற்றும் விஜயிடயே நிலவும் நட்புறவை பற்றி அட்லீயே பல தருணங்களில் பகிர்ந்துள்ளார்.

அண்மையில் அட்லீ மற்றும் பிரியா அட்லீ தாங்கள் பெற்றோராக போகும் செய்தியை சமூகவலைதளங்கள் வழியே அறிவித்தனர்.

இந்நிலையில், நேற்று பிரியா அட்லீயின் வளைகாப்பு நிகழ்வில் விஜய் கலந்து கொண்டு இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். நிகழ்ச்சிக்கு விஜய் பரிசோடு சென்ற காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.