‘வாரிசு படம் நீங்க நினைக்குற மாதிரி இருக்காது’ – திடீர் ட்விஸ்ட் கொடுத்த வம்சி

117
Advertisement

எட்டு ஆண்டுகளுக்கு பிறகு விஜய் அஜித் படங்கள் நேரடியாக திரையரங்குகளில் மோதுவதால், இரு படங்களை பற்றிய உச்சகட்ட எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் ட்ரைலர் வெளியாகியதில் இருந்தே, படம் இப்படித்தான் இருக்கும் போன்ற யூகங்களும் பிற படங்களுடனான ஒப்பீடுகளையும் சமூகவலைதளங்களில் பரவலாக காண முடிகிறது.

அதே நேரத்தில், பட ப்ரோமோஷனுக்காக இயக்குநர் வம்சி பல்வேறு நேர்காணல்களில் கலந்து கொண்டு, வாரிசு படம் பற்றிய பல தகவல்களை பகிர்ந்துள்ளார். அப்படி பேசுகையில், ட்ரைலர் பார்த்து விட்டு படம் இப்படி இருக்கும் என பலர் நினைத்துள்ளனர். ஆனால், நிறைய surprise அம்சங்களோடு படம் வேறு மாதிரி இருக்கும் என வம்சி கூறியுள்ள கருத்து ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டி வருகிறது.