‘லியோ’ படத்தில் விஜய் சேதுபதி..ஹிண்ட் கொடுத்த ரத்னகுமார்! அப்ப LCU தானா?

52
Advertisement

விஜயின் 67வது படத்தை லோகேஷ் இயக்குவது தெரிந்ததுமே, இந்தப் படம் LCUவாக தான் இருக்கும் என்ற கருத்து நிலவி வருகிறது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வரவில்லை என்றாலும் பல குறியீடுகளை தேடி வருகின்றனர் ரசிகர்கள்.

படப்பிடிப்பு பூஜையில் ஜார்ஜ் மரியான் கலந்து கொண்டது, வசந்தி காஷ்மீர் படப்பிடிப்பு சென்றிருப்பது ஆகியவற்றை வைத்து ‘கைதி’ நெப்போலியனும், ‘விக்ரம்’ ஏஜென்ட் டீனாவும் படத்தில் இருப்பதாக ஏற்கனவே பேசப்பட்டு வருகிறது.

Advertisement

இந்நிலையில், உடைந்த கண்ணாடியுடன் படத்தின் திரைக்கதை ஆசிரியர் ரத்னகுமார் போட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு கவனம் ஈர்த்துள்ளது.

‘விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதி அணிந்திருந்த கண்ணாடியின் பாகம் போல இது இருப்பதால், விஜய் சேதுபதியும் படத்தில் இடம்பெறுவாரா? படம் LCU வாக இருக்குமா போன்ற கேள்விகள் மீண்டும் சமூகவலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது.