தளபதி 66 டைட்டில் ரிலீஸ்

223
Advertisement

வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

புதிய photoshoot ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ள படக்குழுவினர் விரைவில் படத்தின் first  look மற்றும் டைட்டிலை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக டைட்டில் ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மண்டானா, பிரகாஷ் ராஜ், சரத் குமார், பிரபு, ஜெயசுதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

‘தடையற தாக்க’, ‘ஸ்கெட்ச்’ போன்ற படங்களுக்கு இசையமைத்த தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.