வாய்ப்புகள் அதிக அளவில் கிடைப்பதற்கு பிற மொழிகளைக் கற்றுக் கொள்வதில் தவறு இல்லை என கல்லூரி பட்டமளிப்பு விழாவில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர் ராஜன்  தெரிவித்துள்ளார்..

153
Advertisement

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆலம்பட்டி கிராமத்தில் உள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 

இதில் 600 மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.  இதில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தர் ராஜன் வாய்ப்புகள் அதிக அளவில் கிடைப்பதற்கு பிற மொழிகளைக் கற்றுக் கொள்வதில் தவறு இல்லை என கறிப்பிட்டார்.  மேலும் மாணவ மாணவிகளுக்கு புத்தகம் படிப்பதினால் ஏற்படும் நன்மைகளைப் பற்றியும் எடுத்துரைத்தார்.