பள்ளிமாணவரை வற்புறுத்தி மசாஜ் செய்யவைத்த ஆசிரியை

318
Advertisement

சமீப நாட்களாக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் அவலநிலை குறித்த செய்திகள்  உலா வருகிறது.இந்நிலையில் அரசு ஆரம்பப்பள்ளி ஒன்றில்  மாணவரை  ஆசிரியை ஒருவர் மசாஜ் செய்யவைக்கும் வீடியோ வைரலாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஹர்டோய் (Hardoi) பகுதியில் உள்ள ஆரம்பப் பள்ளியின் ஆசிரியை ஒருவர், மாணவனிடம்  மசாஜ் செய்யும்படி வற்புறுத்தியாக கூறப்படுகிறது.அந்த ஆசிரியை  ஊர்மிளா சிங் என பின்னர் அடையாளம் காட்டப்பட்டது.

வீடியோவில், அந்த ஆசிரியை நாற்காலியில் உட்காந்து இருக்க,அந்த மாணவர்ஆசிரியையின் கையை அமுக்கிடுகிறார்.பாடம் எடுப்பதற்கு  பதிலாக வகுப்பறையில் ஓய்வெடுத்துக் கொண்டு  இருக்கிறார் அந்த ஆசிரியை.இந்த வீடியோ வைரலானதை அடுத்து,ஆசிரியை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக  அம்மாவட்ட கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.