தலைமுடி ,நகம்,தோல் அனைத்துக்கும் நன்மை தரும் ‘டீ ட்ரீ ஆயில்”

284
Advertisement

“டீ ட்ரீ ஆயில்” தேயிலைச் செடியில் இருந்து தயாரிக்கப்படுவதாக பலரும் நினைக்கிறார்கள் . ஆனால், இது ‘மெலலூகா ஆல்டர்னி போலியா’ என்ற மரத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

‘டீ ட்ரீ ஆயிலில் உள்ள ‘டெர்பினின் 4 ஓ.எல்.’ என்ற மாலிக்யூல் , பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சைகளை அழிக்கும் தன்மை கொண்டது. ரத்த வெள்ளை அணுக்களின் செயலை மேம்படுத்துவதோடு சளி, இருமல் போன்ற பிரச்சினைகளுக்கு மருந்தாகவும் செயல்படும் . இது இயற்கை கிருமிநாசினியாக பயன்படுவதுடன், காயங்களையும் குணப்படுத்துகிறது.‘டீ ட்ரீ ஆயிலை நேரடியாகப் பயன்படுத்தாமல், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் கலந்து பயன்படுத்தினால் பலன் அதிகம் கிடைக்கும்.

முடி உதிர்வு, அடர்த்தி குறைவது, பொடுகு, அரிப்பு போன்ற தலைமுடி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்கும் தன்மை ‘டீ ட்ரீ ஆயிலுக்கு க்கு உண்டு.இதில் உள்ள ‘ஜிங்க் ஆக்சைடு’ சருமத்தில் ஏற்படும் அரிப்பை நீக்குவதோடு , ஈரப்பதத்தைத் தக்க வைத்து, சருமம் வறண்டு போவதைத் தடுக்கிறது. இதை நகத்தின் மீது தடவி வரும்போது, பூஞ்சைத்தொற்று நீங்கும். இந்த எண்ணெய்யை கால் பாதம், கைகளில் தடவி மசாஜ் செய்யும்போது, மிருதுவாகவும், அழகாகவும் மாறும்.