கோடை விடுமுறை கொண்டாட தயாரா

410
Advertisement

கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த ஆண்டும் கல்வியாண்டு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்தன. இந்த சூழலில், 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காலை வெளியிட்ட நிலையில், மதியம் முழு தேர்வு அட்டவணையும்  வெளியானது.

பொதுத் தேர்வுகள்  மே மாதம் தொடங்கி, அதே மாதத்தில் முடிகின்றன. 10, 11, 12 ஆகிய வகுப்புக்கான 3 பொதுத் தேர்வுகளையும் சுமார் 26 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். முதலில் 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு ஏப்ரல் 25ம் தேதி தொடங்குகிறது . பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 முதல் மே 30 வரை பொதுத்தேர்வு நடைபெறும். ஜூன் 17ல் முடிவு வெளியாகின்றன.12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 முதல் மே 28 வரை பொதுத்தேர்வு நடைபெறுகிறது.

பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 முதல் மே 31ம் தேதி வரை பொதுத்தேர்வு தொடங்கவுள்ளது. ஜூலை 7ல் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எப்போதில் இருந்து எப்போது வரை கோடை விடுமுறை என்று தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 1 முதல் 5ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு மே 13 வரை வகுப்புகள் நடைபெறுகின்றன. அதற்குப் பிறகு கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. மீண்டும் ஜூன் 13ஆம் தேதி வகுப்புகள் தொடங்குகின்றன.

அதேபோல 10ஆம்  வகுப்பு மாணவர்களுக்கு 30 நாட்களும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 23 நாட்களும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்புக்கு 12 நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட உள்ளது.