தமிழ்நாடு வளர்ந்த மாநிலம்
நிதியமைச்சர் பேச்சு

447
Advertisement

தமிழ்நாடு ஏழை மாநிலம் அல்ல, வளர்ந்த மாநிலம் என்று தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் பேசினார்.

சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான பொதுவிவாதத்துக்குப் பதிலளித்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியபோது இவ்வாறு கூறினார்.

மேலும் அவர் பேசியபோது, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதை அடிப்படையாகக்கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் பட்ஜெட்டில் கொண்டுவரப்பட்டுள்ளன.

பல்வேறு ஆராய்ச்சிகள் தமிழகம் வளர்ந்த மாநிலம் என்பதையே காட்டுகிறது.

தமிழகத்தில் 100 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர் செல்போன் வைத்துள்ளனர். 72 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோருக்கு தமிழகத்தில் சொந்த வீடுகள் உள்ளதாக ஆய்வின்மூலம் தெரியவந்துள்ளது.

அதிலும் அரசு வீடுகள் 14 சதவிகிதம் உள்ளது. 66 சதவிகிதம்பேர் 2 சக்கர வாகனம் வைத்துள்ளதோடு, 50 சதவிகித வீடுகளில் குளிர்சாதனப் பெட்டி உள்ளது
என்று குறிப்பிட்டுள்ளார்.