பயமுறுத்தும் தக்காளி விலை.. அதுக்குன்னு ஒரே நாளில் இப்படியா..?

184
Advertisement

தமிழகத்தில் தக்காளி, கத்தரிக்காய் விலை கிடுகிடுவென உயர்ந்து பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை மகாராஷ்டிரா, கர்நாடகாவில் இருந்துதான் அதிக அளவிலான தக்காளி, கத்திரிக்காய் வருகின்றன. இதனிடையே, தற்போது தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக அந்த மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

மழை வெள்ளத்தால் அங்கு விளைவிக்கப்பட்டுள்ள காய்கறிகளும், விவசாயப் பயிர்களும் நாசம் அடைந்துள்ளன. அதேபோல, தொடர் மழையால் பல இடங்களில் போக்குவரத்து முடங்கியுள்ளது.

இதனால் அந்த மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் தக்காளி, கத்தரிக்காயின் வரத்து பெருமளவு குறைந்துள்ளது. இதனால் விலை தற்போது அதிரடியாக உயர தொடங்கியுள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்று வரை 1 கிலோ ரூ.20-க்கு விற்கப்பட்ட தக்காளியின் விலை அப்படியே 2 மடங்காக உயர்ந்து ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நவீன தக்காளியின் விலை ரூ.45 வரை விற்பனை ஆகின்றன.