குடும்ப அட்டைதாரர்களுக்கு.. 2 மகிழ்ச்சி செய்தி.. அதுவும் நாளைக்கே.. சென்னைவாசிகளே இது ரொம்ப மேஜர்..

120
Advertisement

ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2 விதமான மகிழ்ச்சி கிடைத்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கும் குறைந்த விலையில், இலவசமாக அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே ஏராளமான பலன்களை அடைந்து வருகின்றனர். அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களால், அவர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்டு வருகிறது..
ஆனால், ரேஷன் அரிசி கடத்தல் விஸ்வரூபமெடுத்துள்ளது.. எனவேதான், ரேஷன் பொருள்களைப் பெறுவது குறித்து, இலவச தொலைபேசி எண்ணிற்குத் தெரிவிக்கலாம் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. எனினும், ரேஷன் அரிசி கடத்தல்கள் குறைந்துள்ளதே தவிர முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. குறிப்பாக தேனி மாவட்டம் குமுளி, கம்பம், மொட்டு வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கடந்தவாரம்கூட செய்திகள் வந்திருந்தன.. இப்படி அரிசி கடத்தியதால், ரேஷன் அட்டைதாரர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.. இந்நிலையில்தான், 2 விதமான செய்திகள் வெளியாகி உள்ளன.