இனிமே ஃபிளைட்ட வேடிக்கைதான் பார்க்கணும் போல… தாறுமாறாய் எகிறிய டிக்கெட் விலை!

169
Advertisement

தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வழங்கப்படும் கோடை விடுமுறை நிறைவடைய உள்ளது.

வழக்கமாக ஜூன் முதல் தேதியை பொறுத்து பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் இம்முறை வெயில் வாட்டி வதைப்பதால் மாணவ மாணவிகளின் நலன் கருதி பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் இருந்து பிற நகரங்களுக்கு செல்லும் விமானங்களின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது பயணிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.


காத்திருக்கும் ஆபத்து… கொட்டப்போகும் வரலாறு காணாத மழை.. எச்சரிக்கும் ஆய்வாளர்கள்!
அதாவது சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் விமானக் கட்டணம் 3,675 ரூபாயில் இருந்து, 11,000 ரூபாய் முதல் 14,000 ரூபாயாக மூன்று மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளது. இதேபோல் 3,419 ரூபாயாக இருந்த சென்னை டூ மதுரைக்கான விமான கட்டணம் 10,000 ரூபாய் முதல் 13,000 ரூபாயாக அதிகரித்து பயணிகளுக்கு படபடப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சென்னை டூ திருச்சிக்கான விமான கட்டணம் 2,769 ரூபாயில் இருந்து தற்போது 9,000 ரூபாய் முதல் 13,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் சென்னை மற்றும் கோவை இடையேயான விமான கட்டணம் 3,313 ரூபாயில் இருந்து, 5,500 ரூபாய் முதல் 11,000 ரூபாய் வரை கன்னாபின்னாவென உயர்ந்துள்ளது.


திருப்பதி பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு… இனிமே அது கிடையாது.. தேவஸ்தானம் அதிரடி!
ஏற்கனவே, பிள்ளைகளுக்கான பள்ளிக் கல்லூரி கட்டணங்கள் வெயிட்டிங்கில் உள்ள நிலையில் ஃபிளைட் கட்டணம் இப்படி தாறுமாறாய் உயர்ந்திருப்பது விமானம் மூலம் பயணிக்கும் பெற்றோருக்கு பேரிடியாக உள்ளது. இதனால் கையை பிசைந்து வரும் பயணிகள் உள்நாட்டு விமான சேவை கட்டணத்தை அரசு ஒழுங்குபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.