புகை மண்டலமாக மாறிய தமிழகம்

263

தீபாவளி பண்டிகையையொட்டி வெடிக்கப்பட்ட பட்டாசுகளால், சென்னை, நெல்லை, திருச்சி உள்ளி நகரங்கள் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

தமிழகம் முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் தீபாவளியை ஒட்டி பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டருந்தது. ஆனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசுகளை வெடித்தனர். பகலில் வெடி சத்தம் விண்ணை பிளந்த நிலையில், இரவில் வாணவேடிக்கைகள் வானை வண்ணமயமாக மாற்றின.

இரவில், புஸ்வானம், மத்தாப்பு, சங்கு சக்கரம், ராக்கெட் போன்ற அதிகம் புகையை வெளியிடக்கூடிய வெடிகள் வெடிக்கப்பட்டன. இதனால் நேற்றிரவு சென்னை முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. எதிரில் வரும் வாகனத்தை பார்க்க முடியாத அளவிற்கு புகை மூட்டம் நிலவியதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.