“விளையாட்டில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்ற தமிழக அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

301

விளையாட்டில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்ற திராவிட மாடல் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் பேசிய அவர், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பாடலுடன் தனது உரையை தொடங்கினார். அப்போது பேசிய அவர், சென்னையில் தங்கியிருந்த நாட்களை வெளிநாட்டு வீரர்கள் மறக்க மாட்டார்கள் என நம்புவதாக கூறினார். ஒலிம்பிக்கில் பதங்களை வெல்லும் வகையில், தமிழக வீரர்களை உருவாக்கும் பொருட்டு, 25 கோடி ரூபாய் மதிப்பில் ஒலிம்பிக் தங்க வேட்டை திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்தார். மேலும், அனைத்து சட்டமன்ற தொகுதிகளில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். கபடி மற்றும் சிலம்பத்திற்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் விரைவில் நடத்தப்பட உள்ளதாக குறிப்பிட்ட அவர், சிலம்பாட்டத்துக்கு தேசிய அங்கீகாரம் பெற்றுத்தரும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.