அரசு ஊழியர்கள் கட்டாயம் தாடி வைக்க வேண்டும் தலிபான்கள் புதிய அறிவிப்பு

222
Advertisement

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்தே பொதுமக்களுக்கு விதவிதமான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். ஆண் துணையின்றி பெண்கள் விமானப் பயணம் செல்வதற்கு தடை செய்துள்ளனர்.

தற்போது அரசு ஊழியர்களுக்கு ஒரு புதிய கட்டுப்பாடு ஒன்றை தலிபான்கள் விதித்துள்ளனர். அதில், அரசு ஊழியர்கள் தாடி வைத்திருக்க வேண்டும் என்றும் அப்போது தான் அலுவலங்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர். இந்த உத்தரவுக்கு பின்னர் அமைச்சரவை அலுவலகத்திற்குள் தாடி வைக்காமல் சென்ற அரசு ஊழியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.