117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களை கைப்பற்றி பெரும் வெற்றி பெற்றது.இந்நிலையில் பஞ்சாப்பின் புதிய முதலமைச்சராக வரும் 16ஆம் தேதி பகவந்த் மான் பதவியேற்கிறார் . பதவியேற்பு விழாவானது ஆளுநர் மாளிகையில் இல்லாமல், விடுதலை போராட்ட வீரர் பகத் சிங்கின் ஊரான கட்கர்காலனில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அரவிந்த் கெஜ்ரிவாலும் பகவந்த் மானும் அமிர்தசரசில் வரும் ஞாயிற்று கிழமை வெற்றி பேரணி நடத்த உள்ளனர்.