சூரியவம்சம் இரண்டாம் பாகம் வரப்போகுதா..?

141
Advertisement

சூரிய வம்சம் படம் மக்கள்  மத்தியில் பெரும் வரவேப்பை பெற்ற நிலையில் தற்போது 2ஆம் பாகம் வெளியாக உள்ளதாம் அதை பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு.

சரத்குமார் தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த  நடிகராகவும், அரசியல்வாதியாகவும் இருந்து வரும் பிரபலம். இவர் தன் சினிமா பயணம் ஆரம்பத்திலிருந்து பல வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்த வகையில் சரத்குமார் வெற்றி தோல்வி என இரண்டயும் சந்தித்து வருகிறார் என்ன சொல்லப்படுகிறது.

சமீபத்தில் அவர் நடிப்பில் ருத்திரன், பொன்னியன்செல்வன்  வெளியான நிலையில்  தற்போது Custody, Bandra, Criminal, The Smile Man, Paramporul என தமிழ், தெலுகு, மலையாளம் ஆகிய மொழிகளில் படங்கள் வெளியாக உள்ளது என்று கூறப்படுகிறது. சமீபத்தில் பொன்னியன்செல்வன் படத்தின் வெற்றியை பற்றி சரத்குமார் பேசும்போது அவர் கூறியது என்னவென்றால்  40 வருடங்களாக சினி உலகில் பயணிக்கிறார் என்றும், அணைத்து மொழி   படங்களிலும் தன்  சொந்த குரலில் தான் டப்பிங் செய்துள்ளார் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

மேலும் அவர் 145 படங்கள் நடித்து விட்டதாகவும், 24 படங்கள் தன் கைவசம் உள்ளதாகவும் அவர் கூறினார். இதனைத்தொடர்ந்து தன் 150 ஆவது படமாக ஸ்மைல்மேன் தாயாகிறது என்று கூறியது மட்டுமல்லாமல் சூரிய வம்சம் படத்தின்  மூலமாக அனைவரின் கவனத்தை ஈர்த்த சரத்குமார் தற்போது  சூரிய வம்சம் 2ஆம் பாகம் எடுக்க ,முறைச்சிகள் நடக்கின்றனர் என்று அவர் கூறிய தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.