திடீர் சோதனை ; 56 லட்சத்தை பறிகொடுத்த தம்பதி

232

திருச்சி விமான நிலையத்தில் 1 கிலோ தங்கத்தை கடத்தி வந்த தம்பதிகளிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

துபாயில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு இண்டிகோ விமானம் வந்தது. அப்போது, விமானத்தில் வந்திறங்கிய பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது 2 பேர் தாங்கள் கொண்டு வந்த உடைமைகளில் 56 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய் மதிப்புலான 1கிலோ தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர்கள் இருவரும் கணவர், மனைவி என்பதும் அம்பலமானது.

இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் இதுகுறித்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.