சன்பிளவர், பாமாயில் சமையல் எண்ணெய்களின் விலை உயர்ந்தது

486
Advertisement

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதலின் எதிரொலியாக சன்பிளவர், பாமாயில் போன்ற சமையல் எண்ணெய்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் உணவு பொருட்களின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.சமையலுக்கு உபயோகிக்கக்கூடிய சூரியகாந்தி எண்ணெய்70 சதவிகிதம் உக்ரைனில் இருந்தும் 20 சதவிகிதம் ரஷ்யாவிலிருந்தும் தான் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது.

தற்பொழுது அங்கு போர் நடந்து வருவதால் இறக்குமதி முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.இதன் காரணமாக சன் பிளவர் ஆயில் தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும்,இது மேலும் உயர வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக உணவுப் பொருட்களின் விலையும் கடுமையாக உயரும் அபாயம் உள்ளது