மாணவிகள் தலைமுடி வளர்க்கத் தடை

245
Advertisement

பள்ளி மாணவிகள் தலைமுடி வளர்க்கத் தடை
விதிக்கப்பட்டுள்ள தகவல் சமூக ஊடகத்தில்
வைரலாகப் பரவி வருகிறது.

ஜப்பான் நாட்டில்தான் இந்த விநோதமான
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாணவிகளின் நீளமான கூந்தல் மாணவர்களின்
பாலியல் உணர்வைத் தூண்டுவதாகக் கருதப்
படுவதாகவும், அதன்காரணமாக மாணவிகள்
நீளமான கூந்தலோடு வருவதற்குத் தடை
விதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் மாணவிகள் எவ்வளவு நீளமாக
ஷாக்ஸ் அணியவேண்டும், எந்த நிற உள்ளாடை
அணியவேண்டும், எந்த மாதிரியான உடை உடுத்தி
வரவேண்டும், பாவாடையின் நீளம் எவ்வளவு இருக்க
வேண்டும், புருவம் எப்படி இருக்கவேண்டும், தலைமுடி
எந்த நிறத்தில் இருக்கவேண்டும் என்பது உள்ளிட்ட
பல விதிகள் அடக்கம்.

இந்தக் கடுமையான கட்டுப்பாட்டைப் பின்பற்றுகிற
பல பள்ளிகள் ஜப்பானில் பிரபலமடைந்துள்ளன.

அந்த வகையில், இப்போது ஒரு விநோத நடவடிக்கையாக
சில பள்ளிகளில் மாணவிகள் நீளமாக ஜடைபோட்டுக்
கொள்வது அல்லது கூந்தலை நீளமாக வளர்ப்பதற்கு
அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஏனென்றால், நீளமான கூந்தல், ஜடை ஆகியவை
மாணவர்களின் பாலியல் உணர்வைத் தூண்டுகிறதாம்.

ஜப்பானிலுள்ள மிகப்பெரிய நகரங்களுள் ஒன்றான
ஃபுகுவோகாவின் தெற்குப் பகுதியிலுள்ள 10 பள்ளிகளில்தான்
இந்தத் தடை உத்தரவு கொண்டுவரப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு நிலவரப்படி உள்ள தகவல் இது.

பள்ளிகளின் இந்த நடவடிக்கைக்குப் பெற்றோர்கள்
கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதனால், சில
பள்ளிகள் தங்களின் விதிமுறைகளில் திருத்தம் செய்துள்ளன.

இந்த விதிமுறைகளுக்குப் பல்வேறு தரப்பினரும் தங்களின்
எதிர்ப்பைத் தெரிவித்து வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.