வாகனங்கள் சீட்டை கடித்து குதறும் நாய்கள் கோபத்தில் மக்கள்

202

மதுரை ரேஸ்கோர்ஸ் காலனி பகுதியில் இருசக்கர வாகனத்தின் சீட்டை தெருநாய்கள் கடித்து குதறும் காட்சிகள் வெளியாகி உள்ளது. மதுரை மாநகர் ரேஸ்கோர்ஸ் காலனி பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் அண்மை காலமாக தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதாக, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தார்.

சாலையில் நடந்து செல்பவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் தெருநாய்கள் கடிப்பதாக தெரிவித்தனர். இந்நிலையில், வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் சீட்டை தெருநாய்கள் கடித்து குதறியுள்ளன. இதுதொடர்பான சி.சி.டி.வி காட்சிகளும் வெளியாகி உள்ளன.