தொடங்கியது டிஎன்பிஎஸ்சி குரூப் – 1 முதன்மைத் தேர்வு

274
Advertisement

டிஎன்பிஎஸ்சி குரூப் – 1 முதன்மைத் தேர்வு சென்னையில் இன்று தொடங்கியது

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் குருப் 1 பணிகளுக்கான அறிவிப்பு 2020 ஜனவரி 20 ந் தேதி வெளியிடப்பட்டது. இதற்கான முதன்மை தேர்வு மார்ச் 4,5,6 ஆகிய தேதிகளில் சென்னை மையத்தில் மட்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

துணை ஆட்சியர், காவல் துறை துணை கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் உள்ளிட்ட பதவிகளில் 66 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்பட்டது. கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள், உயர்நீதிமன்ற வழக்கு ஆகியவற்றின் காரணமாக முதன்மைத் தேர்வு நடைபெறுவதில் தாமதம் நடைபெற்றது.

Advertisement

இதனைத் தொடர்ந்து, முதன்மைத் தேர்வுக்கு 3 800 பேர் தேர்வுசெய்யப்பட்ட நிலையில், தேர்வு இன்று தொடங்குகிறது. சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு இந்தத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.