கோமாட்சு தொழிற்சாலையை சுற்றி பார்த்த ஸ்டாலின்! ஒரு நிமிடத்தை கூட வீணாக்காத ஜப்பானியர்கள் உழைப்பு…!

138
Advertisement

அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், ஒசாகா நகரில் உள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை நேரில் பார்வையிட்டார்.

கோமாட்சு நிறுவனமானது கால்வாய்களை தூர் வார பயன்படுத்தப்படும் செயின் வண்டி உள்ளிட்ட தொழில்துறை இயந்திரங்களை உற்பத்தி செய்வதில் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது.

சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும், தமிழ்நாட்டிற்கான முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும், கடந்த 23ஆம் தேதி சிங்கப்பூர் சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது இரண்டு நாள் சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு 25ஆம் தேதி இரவு ஜப்பான் நாட்டின் ஒசாகா மாகாணம் சென்றார்.

அதனைத் தொடர்ந்து நேற்று காலை ஒசாகாவில், ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புடன் (ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு – JETRO) இணைந்து நடத்தப்பட்ட மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் கலந்து கொண்டு, தமிழ்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்ளவும், சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்து உரையாற்றினார். மேலும் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்திற்கும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் (டெய்சல் சேஃப்டி சிஸ்டம்ஸ்) நிறுவனத்திற்கும் இடையே முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.