கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இடி,
மின்னல் மற்றும் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த கனமழையால், சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதியில் மழைநீருடன் கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியதால் மக்கள் கடும் அவதியடைந்தனர். பல இடங்களில் கழிவுநீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதால், தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.