போப்பாண்டவர் உரையைக் கேட்ட ஸ்பைடர் மேன்

353
Advertisement

வாடிகன் நகரில் 23-6-2021 அன்று போப் பிரான்சிஸ் நடத்திய
பிரார்த்தனையில் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு
ஆசிபெற்றனர். இதில் சபை மக்களில் ஒருவராக ஸ்பைடர்
மேன் வேடத்தில் வந்தவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

காமிக் புத்தகத்தில் வரும் ஸ்பைடர் மேன்போல கருப்பு, சிவப்பு,
நீலநிறத்தில் இறுக்கமான உடையணிந்து தலையையும் அதே
உடையால் மறைத்து வந்த அவர் முக்கியப் பிரமுகர்கள் வரிசையில்
உபதேசியார் அருகே வந்தமர்ந்தார்.

ஸ்பைடர் மேனாக வந்தவர் வடக்கு இத்தாலியைச் சேர்ந்த
மேட்டியா வில்லார்டியா என்ற 27 வயது இளைஞர் என்பது
தெரியவந்தது.

விஐபிக்கள் அமர்ந்து போப்பாண்டவரின் உரையைக் கேட்கும்
வரிசையில் மேட்டியா உட்கார்ந்திருப்பதற்கான காரணம் இதுதான்.

இந்த இளைஞர் சூப்பர்ஹீரோ உடையணிந்து, மருத்துவமனைகளுக்குச்
சென்று நோய்வாய்ப்பட்ட குழந்தைகளைப் பார்வையிட்டுள்ளார்.
அவரது இந்த மனிதநேயம்மிக்க செயலுக்குப் பரிசாகத்தான்
போப்பாண்டவரின் உரையை விஐபிக்கள் வரிசையில் அமர்ந்து
கேட்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

நிகழ்வின் முடிவில் மேட்டியா போப்பாண்டவரிடம் அறிமுகம்
செய்து வைக்கப்பட்டார். இதேபோல், கடந்தாண்டு இத்தாலிய
செர்ஜியோ மெட்டர்லா என்ற இளைஞருக்கு சேவையைச் செய்ததற்காக
விருது வழங்கிக் கௌரவித்தார்.