நமக்குத் தெரிந்த பணத்துக்கு எத்தனை பெயர்கள் தெரியுமா?
கோவில்களில் காணிக்கை எனவும்,
கல்விக் கூடங்களில் கட்டணம் எனவும்
திருமணங்களில் வரதட்சணை எனவும்,
திருமணத்தில் மொய் எனவும்,
திருமண விலக்கில் ஜீவனாம்சம் எனவும்,
விபத்தில் பாதிக்கப்பட்டால் நஷ்ட ஈடு எனவும்,
ஏழைக்குக் கொடுத்தால் தர்மம் எனவும்,
திரும்பத் தர யாருக்காவது கொடுத்தால் அது கடன் எனவும்,
விரும்பிக் கொடுத்தால் நன்கொடை எனவும்,
நீதிமன்றத்தில் செலுத்தினால் அபராதம் எனவும்,
அரசிடம் செலுத்தினால் வரி எனவும்,
செய்த வேலைக்கு மாதந்தோறும் கிடைப்பது சம்பளம் எனவும்,
தினமும் கிடைப்பது கூலி எனவும்
பணி ஓய்வுபெற்ற பிறகு மொத்தமாகக் கிடைப்பது பணிக்கொடை எனவும் மாதந்தோறும் கிடைப்பது ஓய்வூதியம் எனவும்,
சட்டத்துக்கு விரோதமாகக் கிடைப்பது லஞ்சம் எனவும்,
வாங்கிய கடனுக்குக் கொடுக்கும்போது வட்டி எனவும்,
குருவுக்குக் கொடுக்கும்போது தட்சணை எனவும்,
ஹோட்டலில் சர்வருக்கு தருவது டிப்ஸ் எனவும்,
தொழிலில் வளர்ச்சியடைந்தால் கிடைப்பது லாபம் எனவும், வீழ்ச்சியடைந்தால் நட்டம் எனவும்,
குழந்தைகளுக்கு அன்போடு தருவது அன்பளிப்பு எனவும்,
கஷ்டப்படுவோருக்குத் தருவது இனாம் எனவும்,
நஷ்டடைந்தோருக்கு உதவுவது நிதியுதவி எனவும்
பல்வேறு பெயர்கள் பணத்துக்கு வழங்கப்படுகின்றன. தமிழில்தான் பணத்துக்கு எத்தனைப் பெயர்கள் பார்த்தீர்களா… தமிழுக்கும் அமுதென்று பேர் எனப் பாடியதைக் கேட்டீங்களா….