சிம்புவுடன் மோதும் தனுஷ்

267
Advertisement

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலமும், ஜெயமோகன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படமும் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்நிலையில், திருச்சிற்றம்பலம் படம் ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாக இருக்கும் அறிவிப்பை, மோஷன் போஸ்டருடன் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வெந்து தணிந்தது காடு குழுவும் அந்த நாளையே ரிலீசுக்கு பரிசீலித்து வந்ததாக பேசப்பட்டு வரும் நிலையில், சிம்பு படத்தின் ரிலீஸ் என்று என்பதை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

இதற்கிடையே, தனுஷ் மற்றும் சிம்புவின் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் காரசாரமாக விவாதித்து வருகின்றனர். 2004ஆம் வருடம் சிம்புவின் மன்மதன் படமும் தனுஷின் ட்ரீம்ஸ் படமும் ஒரே நாளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.