ஆட்டோ டிரைவராக சிம்பு !

392
Advertisement

மாநாடு படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு கெளதம் மேனன் இயக்கும் வெந்து தணிந்தது காடு படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் சிம்பு.

தற்போது படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை அடுத்து பத்து தல படத்தின் படப்பிடிப்பில் இணைய உள்ளார். இந்தப் படத்தில் சிம்புவுடன் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்க உள்ளார்.

இந்நிலையில் ஆட்டோ டிரைவர் கெட்டப்பில் உள்ள சிம்புவின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.இந்த வீடியோ விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டதா ? அல்லது திரைப்படத்தின் கட்சியா என தற்போது வரை உறுதிசெய்யப்படவில்லை.

இருப்பினும் ஆட்டோ ஓட்டுனர் கெட்டப்பில் மாஸாக உள்ள சிம்புவின் வீடியோவை,அவரது ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.