விழுப்புரத்தில் வளைத்து வளைத்து பைக் ஓட்டிய நபரால், அவருக்கு பின்னால் இருசக்கரவாகனத்தில் மகனுடன் வந்த தாய் உயிரிழந்த அதிர்ச்சி காட்சிகள் மனதை பதைபதைக்க வைத்துள்ளது…

29
Advertisement

விழுப்புரம் மாவட்டம், கோட்டகுப்பம் அருகே கார் மோதி பெண் உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூனிமேடு பகுதியைச் சேர்ந்த ஜீனத் பேகம், தனது மகன் அப்துல்ரசாத்துடன், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவரது இருசக்கர வாகனம், முன்னால் சென்ற மற்றொரு இரு சக்கர வாகனம் மீது மோதியதால், தாய் மகன் இருவரும் நிலைதடுமாறி  கீழே விழுந்தனர். அப்போது, பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக இருவர் மீதும் மோதியது. இதில், படுகாயம் அடைந்த இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஜீனத் பேகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் மனதை உறைய வைத்துள்ளது.