சளைக்காமல் சாதித்து காட்டும் கோவை சிங்கப்பெண் ஷர்மிளா! குவியும் பாராட்டுக்கள்…..

256
Advertisement

கோவையின் முதல் பெண் பஸ் ட்ரைவரான ஷர்மிளா தன்னுடைய சாதனை வாயிலாக தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்தார். நாள்தோறும் கடந்து வரும் பயண அனுபவங்கள், சுவாரஸ்ய புகைப்படங்களை  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து பல லைக்குகளையும் வாழ்த்துக்களையும் பெற்று வருகிறார் ஷர்மிளா.

ஷர்மிளாவின் விடாமுயற்சியையும் தன்னம்பிக்கையும் பாராட்டி பல்வேறு சமூக அமைப்புகளும் அவரை பாராட்டி வருகிறது. கோயம்புத்தூர் ரோட்டரி சங்கம் ஷர்மிளாவை கௌரவித்த நிகழ்வு அண்மையில் அரங்கேறியது.

அது மட்டுமில்லாமல், கோவை போலீஸ் கமிஷனர் திரு பாலகிருஷ்ணன் அவர்கள் ஷர்மிளாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இளம்பெண்களுக்கு முன்னுதாரணமாக, தன்னுடைய துறையில் சிறந்து விளங்கி வரும் ஷர்மிளாவுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.