அந்த ஒல்லி வெள்ளை எலி ராமராக நடிப்பதா?: நடிகை கங்கனா ரனாவத்..

127
Advertisement

ராமராக நடிக்கவிருக்கும் நடிகர் ரன்பிர் கபூரை கங்கனா ரனாவத் வெள்ளை எலி என தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நிதேஷ் திவாரியின் ராமாயணா படத்தில் ரன்பிர் கபூர் ராமராகவும், அவரின் காதல் மனைவியான ஆலியா பட் சீதாவாகவும் நடிக்கப் போகிறார்கள் என தகவல் வெளியாகி தீயாக பரவியிருக்கிறது. இது குறித்து அறிந்த பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் ரன்பிர் கபூரை விளாசி இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டுள்ளார்.

கங்கனா இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது, பாலிவுட் ராமாயணா என்று கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறேன். அதில் எலும்பும் தோலுமாக இருக்கும் வெள்ளை எலி ராமராக நடிக்கிறாராம். திரைத்துறையில் உள்ள அனைவரையும் மோசமாக பேசுபவர் அந்த நடிகர். பெண்கள் விஷயத்தில் வீக், போதைப் பொருளுக்கு அடிமையாகியிருக்கிறார். சிவனாக நடித்தவர் தற்போது ராமராக நடிக்கப் போகிறாராம் என தெரிவித்துள்ளார்.

அட்லி, அஜித் மச்சானை எல்லாம் அசால்டா ஓரங்கட்டிய தனுஷ் பட நடிகை
சமூக வலைதளவாசிகள் மேலும் கூறியிருப்பதாவது, தன் பி.ஆர். டீம் செய்வதை விட ஒரு படி மேலே போய் விளாசுகிறார் கங்கனா. அவர் யாரையும் முன்னே விட்டு பின்னே திட்டுபவர் இல்லை. முகத்திற்கு நேராகத் தான் திட்டுகிறார். அவருக்கு மட்டும் இது போன்ற வார்த்தைகள் எங்கிருந்து தான் கிடைக்கிறது என வியக்கிறோம் என்கிறார்கள்.