மறக்க முடியாத ஷேன் வார்னேவின் முக்கிய சாதனைகள்

220
Advertisement

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் 52 வயதான ஷேன் வார்னே நேற்று தாய்லாந்தில் அவரது வீட்டில் மாரடைப்பால் காலமானார். அவரது இறப்பு கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றின் வெற்றி பாதையில் ஷேன் வார்னேவின் பங்கு மிகவும் முக்கியமானதாகும் .

ஒரு லெக் ஸ்பின்னராக கிரிக்கெட் வாழ்க்கையில் அவரது சாதனைகள் மறக்க முடியாதவை. கிரிக்கெட் வரலாற்றில் 1000 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த இரண்டு பந்துவீச்சாளர்களில் ஷேன் வார்னேயும் ஒருவர், மற்றொருவர் முத்தையா முரளிதரன்.1994 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 8 விக்கெட்களை எடுத்து 71 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து இருந்தார். இது அவரது விளையாட்டில் சிறந்த ஆட்டமாகும்.

ஒருநாள் கிரிக்கெட்டில் 293 விக்கெட்களை எடுத்துள்ளார்.

2005 ஆம் ஆண்டில், ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக 40 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஒரு காலண்டர் ஆண்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி வார்னே சாதனை படைத்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 37 முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 1761 மெய்டன் ஓவர்களை வீசியுள்ளார்.
ஆஷஸ் தொடரில் 195 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
102 முறை பேட்ஸ்மேன்களை டக் அவுட் ஆக்கியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங்கில் 3154 ரன்கள் அடித்துள்ளார். இதுவரை செஞ்சுரி அடித்தது இல்லை. இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷேன் வார்ன் 3 முறை ஹாட்ரிக் விக்கெட்களை எடுத்துள்ளார்.