ஷேன் வார்னே உயிரிழப்பு இயற்கையானதே என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது

266
Advertisement

ஷேன் வார்னே உயிரிழப்பு இயற்கையானதே என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

முழு உடல் ஆரோக்கியத்தோடு இருந்த மறைந்த கிரிக்கெட் ஜாம்பவான் சேன் வார்னே எப்படி திடீரென உயிரிழந்தார் என்பது குறித்த தொடர் சந்தேகங்கள் எழுந்தது.

தாய்லாந்து நாட்டிற்கு தனது நண்பர்களுடன் சென்றிருந்த வார்னே, அறையில் எந்தவித பேச்சு மூச்சும் இன்றி கிடந்ததாகவும், அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்றும் முதற்கட்ட விசாரணையில் கூறப்பட்டது.

எனினும் ஷேன் வார்னேயின் 3 நண்பர்களின் மீது சந்தேகப்பட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். ஷேன் வார்னேவின் உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அதன் அறிக்கையை வழங்கியுள்ளனர்.

அதில் வார்னே இயற்கை முறையில் தான் உயிரிழந்துள்ளார் என்றும், அவரின் உடலில் எந்தவித காயங்கள் இல்லையென்றும், ரத்த வாந்தி எடுத்ததால்தான் அறையில் ரத்தக்கறை இருந்திருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.