ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு பாஜக தலைவர் வசுந்தரா தான் தலைவர் சோனியா காந்தி அல்ல என ராஜஸ்தான் மூத்த காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் கூறியுள்ளார்….

85
Advertisement

ராஜஸ்தானில், முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு நடந்து வருகிறது.

இந்த ஆண்டு இறுதியில் அங்கு சட்டசபை தேர்தல் நடக்கிறது. கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம், அசோக் கெலாட் அரசுக்கு எதிராக, துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட்டும், அவருக்கு ஆதரவான 18 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் போர்க்கொடி உயர்த்தினர். பின்னர் காங்கிரஸ் மேலிடத்தின் தலையீட்டால், பிரச்சினை முடிவுக்கு வந்தது.

இப்போது மீண்டும் சச்சின் பைலட் தலைமையில் அசோக் கெலாட் அரசுக்கு நெருக்கடி எழுந்துள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சச்சின் பைலட்,  முதலமைச்சர் பேச்சை கேட்டது அவரது தலைவர் சோனியா காந்தி அல்ல பாஜக தலைவர் வசுந்தரா ராஜே தான் தலைவர் என்றும், அசோக் கெலாட் காங்கிரசை அவமானப்படுத்துகிறார் என குற்றம்சாட்டியுள்ளார். முதல்முறையாக, யாரோ ஒருவர் தங்கள் சொந்தக் கட்சியின் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை விமர்சிப்பதை நான் பார்க்கிறேன் எனவும்  அசோக் கெலாட் குறித்து அவர் விமர்சித்தார்.