பீதியை கிளப்பும் பிளாஸ்டிக் மழை

206
Advertisement

சுற்றுசூழல் மாசடைவதால் அமில மழை பெய்யும் அபாயத்தை பற்றி அறிந்திருக்கும் பலரும் பிளாஸ்டிக்  மழையை குறித்து கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை.

American Chemical Society அண்மையில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கைப்படி, மழைநீரில் மைக்ரோ பிளாஸ்டிக் மற்றும் Forever Chemicals என அழைக்கப்படும் polyfluoroalkyl போன்ற வேதிப்பொருளும் அதிக அளவில் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

இந்த வகை வேதிப்பொருட்கள் அழகு சாதனங்கள், non-stick சமையல் பாத்திரங்கள் போன்றவற்றில் இயல்பாக இருந்தாலும் அவை மனிதர்கள் பாதுகாப்பான உட்கொள்ளும் அளவிற்கு இருந்துள்ளது.

ஆனால், தற்போது அமெரிக்கா மற்றும் டென்மார்க் பகுதியில் ஆராய்ச்சிக்குட்படுத்தப்பட்ட மழைநீரில், Forever Chemicals  மனிதர்கள் இயல்பாக உட்கொள்ளக்கூடிய பாதுகாப்பான அளவை மீறி அபாய கட்டத்தை எட்டியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

1950களில் இருந்ததை விட உலக முழுவதும் ரசாயன உற்பத்தி இரண்டு மடங்காக அதிகரித்திருப்பதே இதற்கு காரணம் என கூறும் விஞ்ஞானிகள், 2050இல் மூன்று மடங்காக உயர இருக்கும் ரசாயன உற்பத்தியால் உச்சகட்ட பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கின்றனர்.