நொடிக்கு நொடி தீவிரமடையும் பிபர்ஜாய் புயல்… கடலோர பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் கனமழை..!

224
Advertisement

அரபிக் கடலில் உருவாகியுள்ள மிகத் தீவிர புயலான பிபர்ஜாய் புயல் நொடிக்கு நொடி தீவிரமடைந்துள்ளது.தென்கிழக்கு அரபிக் கடலில் நேற்று முன்தினம் உருவான பிபர்ஜாய் புயல் நேற்று மிகத் தீவிர புயலாக வலுவடைந்தது.

பிபர்ஜாய் புயல் தற்போது கோவாவிற்கு மேற்கே 820 கிலோ மீட்டர் தொலைவிலும், மும்பைக்கு மேற்கு-தென்மேற்கே 840 கிலோ மீட்டர் தொலைவிலும், போர்பந்தருக்கு 850 கிமீ தென்மேற்கே மற்றும் கராச்சிக்கு தெற்கே 1140 கிமீ தொலைவிலும் உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


ஏமாற்றிய காதலனும்… மாங்கல்ய பாக்கியமும்.. ராமதாஸ் சொன்ன முட்டாள் கதை!பிபர்ஜாய் புயல் ஒவ்வொரு நொடியும் தீவிரமடைந்து வருகிறது. முந்தைய கணிப்புகளை மீறி, இந்த புயல் மிகவும் வலுவாகவும் ஆக்டிவாகவும் உள்ளது. பிபர்ஜாய் புயலின் தற்போதைய பாதை இந்திய கடற்கரையிலிருந்து தொலைவில் இருந்தாலும், கடலோர பகுதியில் அமைந்துள்ள பல நகரங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.


ராமருக்கு மீசை இருக்குமா? கர்ணன் போல இருக்கார்… ஆதிபுருஷை விமர்சித்த கஸ்தூரி!கேரளாவில் நேற்று முதல் தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளது. இந்நிலையில் பிபர்ஜாய் புயலால் மழை மேகங்கள் திரண்டு வருவதால் கேரளாவின் கடலோர மாவட்டங்களில் மழையின் தாக்கம் தீவிரமாக உள்ளது. இந்த பிபர்ஜாய் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் இந்த தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.