அதிசயிக்க வைக்கும் ரோஸ் நிற ஏரி! ஆச்சர்யமூட்டும் அறிவியல் பின்னணி

282
Advertisement

ரோஸ் ஏரி, பிங்க் உப்பு ஏரி என்ற பெயர்களை கொண்ட உலகின் மிகவும் அழகான ஏரிகளில் ஒன்றான சாஸிக் சிவாஷ் ஏரி கிரிமீயாவில் உள்ளது.

யூபடோரியா மற்றும் சகி நகரங்களுக்கு இடையே இருக்கும் இந்த ஏரி பிங்க் நிறத்தில் இருக்க காரணம் அதற்குள் இருக்கும் ஒருவகையான பாசி தான்.

ஒரு லிட்டர் நீரில் 370 கிராம் வரை உப்பு நிறைந்திருக்கும் இந்த ஏரி கிரிமியாவின் மிகவும் உப்புத்தன்மை வாய்ந்த ஏரியாக பார்க்கப்படுகிறது. வருடத்திற்கு பத்தாயிரம் டன் வரை உப்பு உற்பத்தி செய்யப்படும் இந்த ஏரியின் நீருக்கு மருத்துவ பயன்களும் உள்ளதாக கூறப்படுகிறது.

ரோஸ் ஏரியை சுற்றியுள்ள க்ரே (Grey) நிற மண்ணால் மண் குளியல் எடுக்கும் போது இதய மற்றும் தசை சார்ந்த ஆரோக்கியம் மேம்படுவதாகவும் நம்பப்படுவது குறிப்பிடத்தக்கது.