Friday, January 17, 2025

நான் இன்னும் சிரித்துக் கொண்டிருக்கிறேன் வைரலாகும் சமந்தாவின் வீடியோ

நடிகை சமந்தா நண்பர்களுடன் போட்டி போட்டு கயிறு இழுக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த மாத தொடக்கத்தில் தன் கணவர் நாகசைதன்யாவை விட்டு பிரிவதாக நடிகை சமந்தா அறிவித்தார்.

விவாகரத்து அறிவிப்பு வெளியான நிலையில் சமந்தா தன் நண்பர்களுடன் விளையாடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவை சமந்தாவின் தோழி ஷில்பா ரெட்டி முதலில் வெளியிட்டார்.

அதனைத் தொடர்ந்து சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், இப்போது வரை சிரித்துக் கொண்டுதான் இருக்கிறேன், என்னால் வாழமுடியும் என்பதை குறிப்பிடும் வகையில் can still laugh, will survive ஆகிய ஹேஷ்டேக்குகள் சமந்தாவின் பதிவில் இடம்பெற்றுள்ளன.

மேலும்,தனக்கான குறிப்பு என்று குறிப்பிட்டு பொருந்தாத மற்றும் பைத்தியகாரத்தனமான குழு விளையாட்டுகளில் பங்கேற்க கூடாது என்றும் அது காயத்தையும் வலியையும் ஏற்படுத்தும் என்றும் சமந்தா தெரிவித்துள்ளார்.

சமந்தா வெளியிட்டிருக்கும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Latest news