படப்பிடிப்பு தளத்தில் சமந்தாவிற்கு விபத்தா? இரத்தக் காயங்களுடன் வெளியான புகைப்படம்

248
Advertisement

Avengers பட இயக்குனர்களான ரஸ்ஸோ பிரதர்ஸ் தயாரிக்கும் ‘Citadel’ தொடரின் Indian Adapationஇல் சமந்தா மற்றும் வருண் தவான் நடித்து வருகின்றனர்.

மயோசைடிஸ் நோய் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் சமந்தா, Action Sequence நிறைந்த இந்த தொடருக்காக கடுமையான சண்டைப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், கைகளில் காயம் பட்டு இரத்தம் வந்துள்ள விரல்களின் புகைப்படத்தை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். ‘Perks Of Action’ என்ற வாசகத்துடன் இந்த போஸ்ட் பதிவிடப்பட்டுள்ளது.

இதைப் பார்த்த ரசிகர்கள் படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, ‘Citadel’ original version தொடரில் நடிக்கும் பிரியங்கா சோப்ராவின் first look வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.