அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு.. அகவிலைப்படி அதிகரிப்பு…!

159
Advertisement

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து நல்ல செய்தி வந்தது.

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்துவது தொடர்பான அறிவிப்புகளை அரசுகள் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்த அரசின் நிதித் துறை வெளியிட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வு தொடர்பான இந்தச் செய்தி ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிய அகவிலைப்படி உயர்வானது 2023 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு ஜூன் 7ஆம் தேதி வெளியானது.

இந்த மாநில ஆண்டின் தொடக்கம் முதலே மத்திய அரசு மற்றும் அரசுகள் தங்களது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்து வருகின்றன. முதலில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி4 சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஊழியர்களுக்கான அகவிலைப்படி 42 சதவீதமாக உயர்ந்தது.அதன் பிறகு கர்நாடக மாநிலம் தனது அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தியது.

உத்தரப் பிரதேசம், தமிழகம், ஹரியானா, ஜார்கண்ட், இமாசலப் பிரதேசம் போன்ற மாநிலங்களும் அகவிலைப்படி உயர்வை வெளியிட்டன. இந்நிலையில், தற்போது ஜம்மு காஷ்மீரில் அரசு ஊழியர்களுகான அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வானது 6ஆவது ஊதியக் குழுவின் கீழ் வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்குப் பொருந்தும்.