ரஷியர்கள் அதிகம் சிரிக்கவே மாட்டார்கள் ? ஏன் தெரியுமா ?

755
Advertisement

வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, ரஷ்யர்கள் பொதுவாகவே அதிகம் சிரிக்கமாட்டார்களாம். அவர்கள் ஏன் மனம் விட்டு சிரிப்பதில்லை என்பதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது .ரஷ்யர்கள் வாய்விட்டு சிரிக்கும்போது பற்கள் தெரிவதை அவமானமாக எண்ணுக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை வாய்விட்டு சிரிப்பது என்பது குதிரை சிரிப்பதாக கற்பனை செய்துகொள்வார்கள். மேலும், பற்கள் தெரிய சிரிப்பது என்பது அடிமை மனோபாவம் என கருதுவதால், வாய்விட்டு சிரிப்பதை தவிர்ப்பார்களாம்.உதட்டளவில் சிரிப்பதை மட்டுமே இயல்பானதாக கருதும் அவர்கள், நெருங்கியவர்களுடன் மட்டுமே மனம் திறந்த சிரிப்பை வெளிப்படுத்துவார்களாம்.