உச்சக்கட்ட பதற்றத்தில் உக்ரைன் கீவ் நகரை நெருங்கிய ரஷ்ய படைகள்

420
Advertisement

கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது படையெடுக்கத் தொடங்கிய ரஷ்யா உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்ற தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ரஷ்யாவின் கோர தாக்குதலில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டும் வீடுகள் மற்றும் உடமைகளை இழந்தும் வருகின்றனர். இதுவரை 25 லட்சம் மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி இருப்பதாக ஐ.நா. தெரிவித்து உள்ளது. இந்த நிலையில், தலைநகர் கீவ் சுற்றி வளைக்கப்பட்டு உள்ளதாக அந்நாட்டு அதிபரின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,உக்ரைன் தலைநகருக்கு அருகில் உள்ள பகுதிகளில் விடிய விடிய ரஷ்ய படைகள் வான்வழிதாக்குதல் நடத்தி வரும் சூழ்நிலையில் இன்னும் சற்று நேரத்தில் ரஷ்ய படைகள கீவ் நகரை தாக்கும்
என அச்சம் தாக்குதல் தொடர்பான சைரன் ஒலிப்பதால் பெரும் பதற்றம்.எண்ணெய் கிடங்குகள் மீதான தாக்குதலால் கிடங்குகள் பற்றி எரிகின்றன கீவ் ஓப்பிளாஸ்ட் பகுதியில் அமைந்துள்ள கிடங்குகளை
குறிவைத்து தாக்குதல் நடந்து வருகிறது .