கெர்சன் நகரை ரஷ்யா கைப்பற்றியது உக்ரைன் அறிவிப்பு

276
Advertisement

ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் நடக்கும் போரானது 8-வது நாளாக நடைபெற்று வருகிறது. உக்ரைன் கார்கிவ் நகரின் மீது ரஷியா ஆயுதம் ஏந்திய வாகனங்கள் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.

உக்ரைனின் தெற்கு நகரமான கெர்சனை ரஷிய படைகள் கைப்பற்றியுள்ளதாக இங்கிலாந்தின் ராணுவ அமைச்சகம் நேற்று கூறியது அதோடு ரஷிய ராணுவ அமைச்சகமும் இந்த நகரின் பெரும்பகுதியை பிடித்து விட்டதாக கூறியது.ஆனால் இந்த தகவலை கெர்சன் மேயர் மறுத்தார். தங்கள் நகரம் உக்ரைன் படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அவர் நேற்று தெரிவித்தார்.

இந்த நிலையில், கெர்சன் நகர் முழுவதுமாக தற்போது தற்போது ரஷியாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. இதனை உக்ரைனும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.