உக்ரைனில் கைப்பற்றிய மக்களுக்கு மரண தண்டனை விதிக்க ரஷியா திட்டம்!

218
Advertisement

உக்ரைனில் கைப்பற்றப்பட்ட நகரங்களில் மக்களை பொதுவெளியில் தூக்கிலிட அல்லது சுட்டுக்கொல்ல ரஷியா திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது 9-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன.

இரு தரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி வரும் ரஷிய படைகளை உக்ரைன் பாதுகாப்பு படையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால், ரஷிய படைகள் தங்கள் தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வருகின்றன.

ரஷியாவால் கைப்பற்றப்பட்ட உக்ரைனில் நகரங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரஷிய படையினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உக்ரைன் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்நிலையில், உக்ரைனில் கைப்பற்றப்பட்ட நகரங்களில் மக்களை பொதுவெளியில் தூக்கிலிட அல்லது சுட்டுக்கொல்ல ரஷியா திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மக்களின் மன உறுதியை சிதைக்க பொதுவெளியில் மக்களை தூக்கிலிட ரஷியா திட்டமிட்டுள்ளதாக ஐரோப்பிய உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.

ரஷிய உளவு அமைப்பின் ரகசிய ஆவணங்களில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், உக்ரைனியர்களின் மன உறுதியை சிதைக்கும் வகையில் போராட்டத்தை கட்டுப்படுத்த,

கடுமையான நடவடிக்கைகள் மற்றும் போராட்டம் நடத்துபவர்களை தலைமை தாங்குபவர்களை கடுமையான சிறை தண்டனை விதித்த உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.